அமேதி தொகுதியில், வேட்புமனு தாக்கல் செய்தார் ஸ்மிரிதி இராணி
உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதியில், மத்திய அமைச்சரும், பாஜக வேட்பாளருமான ஸ்மிரிதி இராணி வேட்புமனுத்தாக்கல் செய்தார்.
உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதியில், மத்திய அமைச்சரும், பாஜக வேட்பாளருமான ஸ்மிரிதி இராணி வேட்புமனுத்தாக்கல் செய்தார். இத்தொகுதியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக களம் காணும் ஸ்மிரிதி இராணி, தமது கணவர் சுபின் இராணியுடன் வந்து, வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அப்போது, உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் உடன் இருந்தார். வேட்புமனுத்தாக்கலுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்மிரிதி இராணி, நாட்டை துண்டாட நினைப்பவருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என ராகுல் காந்தி மீது குற்றஞ்சாட்டினார். முன்னதாக வேட்புமனுத்தாக்கல் செய்ய வந்த போது, வழி நெடுகிலும் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.