மோட்டார் சைக்கிள்களை கொள்ளை அடித்து, விற்று உல்லாசம் : காரில் வந்து கைவரிசை காட்டிய 5 இளைஞர்கள் கைது

ஆம்பூரில் இருந்து காரில் சென்னை வந்து, வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலையுர்ந்த மோட்டார் சைக்கிள்களை திருடிய 5 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-04-05 21:16 GMT
சென்னையை அடுத்த ஆலந்தூரில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த விலையுர்ந்த மோட்டார் சைக்கிள்கள் திருடு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. மோட்டார் சைக்கிள் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படையினர், பரங்கிமலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கும் வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த ஜுல்பி என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், ஆலந்தூரில் விலையுர்ந்த மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்படும் பகுதிகளை கண்காணித்து அதை திருடி வைத்து, ஆம்பூரில் உள்ள தனது நண்பர்களுக்கு தகவல் தருவேன் என்று ஜுல்பி கூறினார்.  அவர்கள்  காரில் சென்னை வந்து விலையுர்ந்த மோட்டார் சைக்கிள்களை கொண்டு சென்று விற்று அந்த பணத்தில் உல்லாசமாக இருந்ததாகவும் ஜூல்பி தெரிவித்தார். இதையடுத்து அவனை கைது செய்த போலீசார், அவனது தகவலின் பேரில், ஆம்பூரை சேர்ந்த சபீக், சாதுல்லா, பைஷான், வாணியம்பாடியை சேர்ந்த முகமது சுகைல் ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விலையுர்ந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில், திறமையாக செயல்பட்ட  தனிப்படை போலீசாரை, உயரதிகாரிகள் பாராட்டினர்.
Tags:    

மேலும் செய்திகள்