கிராமங்களுக்குள் படையெடுக்கும் காட்டு யானைகள்
வறட்சியால் காட்டு யானைகள் தண்ணீரின்றி தவிப்பு
வறட்சி காரணமாக கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார கிராமங்களுக்கு காட்டுயானைகள் படையெடுத்து வருகின்றன.நேற்று மாலை ஆனைக்கட்டி பகுதியில், கூட்டமாக கங்கா சேம்பர் என்ற இடத்திற்கு வந்து, 9 யானைகள் அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடித்தன.இதனை அந்த பகுதியில் உள்ள மக்கள் செல்போனில் படம்பிடித்தனர்.வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில், தண்ணீர் நிரம்பப்படாததே, யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதற்கு காரணம் என்று குறிப்பிட்ட அவர்கள், தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரம்பக்கோரி வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர்