"ஆதீனம் மீது நடவடிக்கை எடுப்போம்" - தினகரன் எச்சரிக்கை

அதிமுகவுடன் இணைக்க எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை டி.டி.வி. தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-01 19:21 GMT
அதிமுகவுடன் இணைக்க எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதிமுகவுடன் டிடிவி தினகரன் இணைவார் என மதுரை ஆதீனம் வெளியிட்ட கருத்துக்கு பதில் அளித்துள்ள அவர்,தொடர்ந்து பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக அதிர்ச்சி  தெரிவித்துள்ளார்.எனவே,  அதிமுக இணைப்பு குறித்து,மதுரை ஆதீனம் தொடர்ந்து தவறான தகவல்களை தெரிவித்தால்,சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கையொன்றில் டி.டி. வி. தினகரன் எச்சரித்துள்ளார்
Tags:    

மேலும் செய்திகள்