காசநோய் எதிர்ப்பு தினம் மருத்துவ முகாம் :நடிகர் ஆரி பங்கேற்று துவக்கி வைப்பு
மார்ச் 24 ஆம் தேதி உலக காசநோய் எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது
மார்ச் 24 ஆம் தேதி உலக காசநோய் எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.இதனை முன்னிட்டு புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் காசநோய் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.நடிகர் ஆரி கலந்துகொண்டு மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள மக்களுக்கு இலவசமாக எக்ஸ்ரே போன்ற கருவிகளைக் கொண்டு வந்து காசநோய் உள்ளதா என்று பரிசோதனை செய்தனர்.மேலும் வயதானவர்களுக்கு கண் பரிசோதனையும் செய்யப்பட்டது.இதற்கு முன்னதாக போலியோ ஒழிப்பதற்கான முயற்சிகளை எடுத்தது போன்று, தற்போது காச நோயையும் தடுப்பதற்கான வழிமுறைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது