லஞ்சம் பெற்ற பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது

திருச்சி மாவட்டத்தில் லஞ்சம் வாங்கிய புகாரில் பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-02-22 18:08 GMT
திருச்சி மாவட்டத்தில் லஞ்சம் வாங்கிய புகாரில் பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார். முசிறி அருகே காட்டுப்புத்தூர் மேற்கு பகுதி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் மணிமேகலை. பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக இவர் நாகலட்சுமி என்ற பெண்ணிடம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து நாகலட்சுமி லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் மனு அளித்தார். பணம் கொடுக்க முயன்றபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மணிமேகலையை கைது செய்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்