மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை - தினகரன்

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2019-02-15 03:14 GMT
ஈரோடு மாவட்டம் அந்தியூரில்  அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் துணை பொது செயலாளர் தினகரன்,  தமிழகத்தில் மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் நிறை வேற்றப் படவில்லை என்று குற்றம்சாட்டினார்.  மத்திய அரசிடம் இருந்து எவ்விதமான திட்டங்களையும் தமிழகத்திற்கு பெற்று தருவதற்கு மாநில அரசு  முயற்சி எடுக்கவில்லை என்றும், வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்