எட்டு துறைகளுக்கு அதிக நிதி
2019-20ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், கல்வி, சுகாதாரம், வேளாண் உள்பட எட்டு துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- தமிழக பட்ஜெட்டில் 8 துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு மட்டும் 1.16 லட்சம் கோடியை தாண்டி இருக்கிறது.
- அந்த வகையில், பள்ளிக்கல்வித்துறைக்கு 28 ஆயிரத்து 757 கோடியே 62 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- அடுத்ததாக நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கலுக்கு 18 ஆயிரத்து 700 கோடி 64 லட்சமும்,
- எரிசக்தி் துறைக்கு 18 ஆயிரத்து 560 கோடியே 77 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
- ஊரக வளர்ச்சிக்கு 18 ஆயிரத்து 273 கோடியே 96 லட்சம், நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை 13 ஆயிரத்து 605 கோடி.
- சுகாதாரத்துறை 12 ஆயிரத்து 563 கோடியே 83 லட்சம் நிதியை அள்ளிச் சென்றுள்ளன. அதேபோல் வேளாண்துறைக்கு பத்தாயிரத்து 550 கோடி நிதியும்,
- நீர்வள ஆதாரங்கள் மற்றும் பாசனத்திற்கு 5 ஆயிரத்து 983 கோடியே 98 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.