கன்னியாகுமரி : காதல் ஜோடி தற்கொலை
கன்னியாகுமரியில் காதல் ஜோடி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே வழுக்கம்பாறை பகுதியை சேர்ந்தவர் அஜித். கட்டுமான பணியாளரான இவர், தனது உறவுக்கார பெண்ணான 11 ஆம் வகுப்பு மாணவி ஆனந்தியை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு இருவரது வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியதால், இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அதன்படி அஜித் அரளிக்காயை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழக்கவே, இதனை அறிந்த மாணவி ஆனந்தியும், அரளிக்காயை அரைத்து தின்று தற்கொலை செய்து கொண்டார். ஒரே பகுதியை சேர்ந்த இளைஞரும், பள்ளி மாணவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.