காதலிப்பதாக கூறி பாலியல் தொல்லை - இளைஞருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை
16 வயது பெண்ணை காதலிப்பதாக கூறி பாலியல் தொந்தரவு செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் பாலயகுடியை சேர்ந்த கிராமத்தை சேர்ந்த மகாதேவன் என்பவர் கடந்தாண்டு, கூத்தூர் கிராமத்தை சேர்ந்த 16 வயது பெண்ணை காதலிப்பதாக கூறி பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து, மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று மகாதேவனுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.