புதிய மடாதிபதி மீது தாக்குதல் - நீக்கப்பட்ட மடாதிபதியின் ஆதரவாளர்கள் மீது புகார்
கும்பகோணம் வீர சைவ மடத்திற்குள் புகுந்த சிலர், புதிய மடாதிபதி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான கும்பகோணம் வீர சைவ மடத்தில் ஸ்ரீ ல ஸ்ரீ நீலகண்ட சாரங்க தேவேந்திர மகா சுவாமிகள் மடாதிபதியாக இருந்துவந்தார். அவர் இல்லாத நேரத்தில் நேற்று காலை மடத்திற்கு வந்த நிர்வாக கமிட்டியினர் மடாதிபதி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி அவருக்கு பதிலாக ஸ்ரீ முருக தேசிக சுவாமிகளை, புதிய மடாதிபதியை தேர்வு செய்துள்ளதாக தெரிவித்தனர்.
இதன் பின், கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த சித்ரதுர்கா மடத்தின் பெரிய மடாதிபதி மகா சுவாமிகள், அவருக்கு பட்டம் சூட்டி ஆசி வழங்கி சென்றார். இதனை அறிந்த ஸ்ரீ ல ஸ்ரீ நீலகண்ட சுவாமிகள் இரவு தனது ஆதரவாளர்கள் 20க்கும் மேற்பட்டோருடன், மடத்திற்கு சென்றார். பூட்டை உடைத்து உள்ளே சென்ற ஆதரவாளர்கள் புதிய மடாதிபதியையும், அவரது உதவியாளர்களையும் சரமாரியாக தாக்கினர்.