போக்குவரத்து காவல் ஆய்வாளர் வீட்டில் சோதனை - லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி

சத்தியமங்கலம் பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறி செல்லும் வாகன ஓட்டிகளிடம் 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற போக்குவரத்து காவல் ஆய்வாளர் பதி, பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2019-01-29 08:06 GMT
சத்தியமங்கலம் பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறி செல்லும் வாகன ஓட்டிகளிடம்  40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற போக்குவரத்து காவல் ஆய்வாளர் பதி, பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.  தலைமறைவான காவல் ஆய்வாளர் பதியை லஞ்ச ஒழிப்பு போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில், மொடச்சூரில் உள்ள போக்குவரத்து காவல் ஆய்வாளர் பதியின் வீட்டில், லஞ்ச ஒழிப்புத்துறை  போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்