கடலூரில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் 6 பேர் கைது - விடுவித்து நீதிபதி உத்தரவு
"போலீஸ் அமைச்சு பணியாளர்களை கைது செய்யாதது ஏன்?"
கடலூரில் கைது செய்யப்பட்ட ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை 6 பேரை நீதிமன்ற காவலில் வைக்க முடியாது என தெரிவித்த நீதிபதி, அவர்களை சொந்த ஜாமீனில் விடுவித்தார். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள காவல்துறை அமைச்சு பணியாளர்களை கைது செய்தால் போலீசாருக்கு சம்பளம் நின்று விடும் என்பதால் அவர்களை கைது செய்யாமல் ஆசிரியர்களை மட்டும் கைது செய்ததாக நீதிபதி அப்துல் சத்தாத் தனது கருத்தை வெளிப்படுத்தினார்.