ஆட்சியர் அலுவலக மரத்தில் ஏறி தற்கொலை முயற்சி
ஆட்சியர் அலுவலக மரத்தில் ஏறி தற்கொலை முயற்சி
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மரத்தில் ஏறி இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கீழ்முருங்கை பனந்தோப்பு பகுதியை சேர்ந்த நூருல்லா என்பவர் ஓராண்டாக தனது நிலத்திற்கு பட்டா வழங்கபடாததால் விரக்தி அடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மரத்தில் ஏறி அமர்ந்து விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே அங்கிருந்த காவலர்கள் பொதுமக்களின் உதவியோடு மரத்தில் இருந்த நூருல்லாவை கயிறு கட்டி இறக்கி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.