தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை - இலங்கை நீதிமன்றம் உத்தரவு
ராமேஸ்வரத்திலிருந்து கடந்த 13 ந்தேதி கடலுக்கு சென்ற 11 மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது.
ராமேஸ்வரத்திலிருந்து கடந்த 13 ந்தேதி கடலுக்கு சென்ற 11 மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது. விசாரணைக்கு பின் இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நிபந்தனையின் பேரில் விடுதலை செய்த நீதிபதி, இனி இலங்கை கடற்பரப்பில் அனுமதியின்றி நுழைந்தால் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்தார். கைப்பற்றப்பட்ட படகு தொடர்பான ஆவணங்களுடன் உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே, விடுதலை செய்யப்பட்ட 11 மீனவர்கள் ஒரிரு நாளில் ராமேஸ்வரம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.