கர்நாடக மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 27 டன் நெல்

கர்நாடக மாநிலத்தில் இருந்து விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட 27 டன் நெல்லை மடக்கிப் பிடித்த திருவாரூர் விவசாயிகள் அதனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Update: 2019-01-14 11:59 GMT
கர்நாடக மாநிலம் மாண்டியாவில் அறுவடை செய்யப்பட்ட  27 டன் நெல், திருவாரூர் அருகே உள்ள குடவாசல் பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்டது. இதனையறிந்த அப்பகுதி விவசாயிகள், ஓகைபேரையூர் பகுதியில் நின்ற லாரியை மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்தால் உள்ளூர் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்பதால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்