மெரினாவில் உள்ள 2000 மீன் கடைகளை அகற்ற வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள 2000 மீன் கடைகளை அப்புறப்படுத்த உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Update: 2019-01-10 10:13 GMT
ஆழ்கடலில் மீன்பிடிப்பது தொடர்பாக மத்திய அரசின் புதிய விதிமுறையை எதிர்த்தும், முராரி குழுவின் அறிக்கையை உடனே அமல்படுத்த உத்தரவிட கோரியும் மீனவர்கள் நல அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் சென்னை மாநகராட்சியை இணைத்து மெரினாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மெரினா கடற்கரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு மற்றும் தூய்மை பணிகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார். இதையடுத்து மெரினா கடற்கரையில் உள்ள சுமார் 2000 கடைகளை அப்புறப்படுத்தி விட்டு, புதிய உரிமத்துடன் குறைவான கடைகளுக்கு அனுமதி வழங்கலாம் என மாநகராட்சிக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்