கர்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் : அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு
கர்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டது குறித்து, அவசர வழக்காக விசாரிக்க கோரி வழக்கறிஞர் நீலமேகம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிட்டார்.
கர்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டது குறித்து, அவசர வழக்காக விசாரிக்க கோரி வழக்கறிஞர் நீலமேகம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிட்டார். இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள் நிர்மல்குமார், சரவணன் அடங்கிய அமர்வு, பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் கருத்து தெரிவித்தனர்.