தேவாலயத்தின் உண்டியல் உடைத்து ரூ.50,000 கொள்ளை
சேலத்தில் உள்ள குழந்தை இயேசு தேவாலயத்தின் உண்டியலை உடைத்து ஐம்பதாயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் உள்ள குழந்தை இயேசு தேவாலயத்தின் உண்டியலை உடைத்து ஐம்பதாயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஜன்னலின் கம்பியை உடைத்து உள்ள நுழைந்துள்ள மர்ம நபர்கள், கண்காணிப்பு கேமிராவின் இணைப்பை துண்டித்து உண்டியல் பணத்தை திருடியுள்ளனர். தொடர்ந்து ஆலயத்தின் அருகே உள்ள கடையின் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்க முயற்சித்துள்ளனர். அப்போது சத்தம் கேட்டு காவலாளி வருவதை கண்ட கொள்ளையர்கள் தப்பி சென்றுள்ளனர்.