மெரினாவை சுத்தப்படுத்தும் பணி : சென்னை மாநகராட்சி ஆணையருக்கு நீதிபதிகள் ஆலோசனை
சென்னை மெரினா கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியை ஆய்வு செய்யும் வகையில் ஒரு மாதத்திற்கு தினமும் காவல் ஆணையருடன், நடைபயிற்சி செல்லும்படி சென்னை மாநகராட்சி ஆணையருக்கு நீதிபதிகள் ஆலோசனை தெரிவித்தனர்.
சென்னை மெரினா கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியை ஆய்வு செய்யும் வகையில் ஒரு மாதத்திற்கு தினமும் காவல் ஆணையருடன், நடைபயிற்சி செல்லும்படி சென்னை மாநகராட்சி ஆணையருக்கு நீதிபதிகள் ஆலோசனை தெரிவித்தனர்.
* ஆழ்கடலில் மீன்பிடிக்க அனுமதி பெற மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மெரினாவை சுத்தப்படுத்தும் திட்டம் வகுக்க அறிவுறுத்தியிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி, அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆஜரானார்.
* அப்போது, மாநகராட்சி சார்பில், மெரினா கடற்கரையை தூய்மைப்படுத்த காலை 6 மணி, பிற்பகல் 2 மணி, இரவு 10 மணி என 3 ஷிப்டுகளில் 250 பணியாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
* மேலும், மெரினாவில் கடை அமைக்க ஆயிரத்து 544 பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும், மீன் சந்தை அமைக்க கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்தின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
* இதையடுத்து மெரினாவை சுத்தப்படுத்தும் பணியை ஆய்வு செய்யும் வகையில் ஒரு மாதத்திற்கு தினமும் காவல்துறை ஆணையருடன், நடைபயிற்சி மேற்கொள்ளும்படி சென்னை மாநகராட்சி ஆணையருக்கு நீதிபதிகள் ஆலோசனை தெரிவித்தனர்.
* இதையடுத்து வழக்கு விசாரணை ஜனவரி 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.