பெற்ற தாயே குழந்தையை அடித்து கொலை

பச்சிளங் குழந்தையை தரையில் அடித்து கொலை செய்துவிட்டு மூச்சுத்திணறி இறந்ததாக நாடகமாடிய தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2018-11-28 23:24 GMT
சென்னை காசிமேடு சிங்காரவேலர் நகரை சேர்ந்த தம்பதி சத்யராஜ், செலஸ்டினா. பிறந்து 18 நாட்களே ஆன இவர்களது குழந்தை, கடந்த 12 ஆம் தேதியன்று, தூக்கத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்து விட்டதாக செலஸ்டினா போலீசாரிடம் கூறியுள்ளார். ஆனால் பிரேத பரிசோதனையில் குழந்தையின் பின்மண்டை உடைபட்டு இறந்துள்ளது தெரிய வந்தது. 

இதையடுத்து போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், தனது பச்சிளம் குழந்தையை தரையில் ஓங்கி அடித்து கொலை செய்ததை தாய் செலஸ்டினா ஒப்புக்கொண்டார். தனது கணவருக்கு ஏற்கனவே திருமணமாகி 3 வயதில் குழந்தை உள்ளதை மறைத்ததாலும்,  தங்களுக்கு ஏற்கனவே ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் மீண்டும் பெண் குழுந்தையை வைத்து கஷ்டப்படுவதை விட கொன்றுவிடுவது மேல் என்று எண்ணி கொலை செய்ததாக, செலஸ்டினா அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து செலஸ்டினாவை கைது செய்த போலீசார் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்