வேடந்தாங்கல் ஏரியில் குறைந்த நீர்இருப்பு : பறவைகளின் திடீர் சரணாலயமான ஏரிகள்
அரிய வகை வெளிநாட்டு பறவைகளின் வருகையால், காஞ்சிபுரத்தில் உள்ள ஏரிகள் திடீர் சரணாலயமாக மாறியுள்ளது.
பருவமழை பொய்த்தால் வேடந்தாங்கல் ஏரியில் நீர் இருப்பு மிகவும் குறைந்துள்ளது. இதனால் அங்கு வலசை வந்து ஏமாற்றத்துடன் திரும்பிய அரிய வகை வெளிநாட்டு பறவைகள், காஞ்சிபுரம் ஏரிகளில் தஞ்சம் அடைந்துள்ளன. வையாவூர், களியனூர், நத்தப்பேட்டை ஏரிகளில் ஏராளமான அரிய வகை பறவைகள் முகாமிட்டுள்ளன. இனப்பெருக்க காலம் முடிந்து மீண்டும் ஜூன் மாதம் இந்த பறவைகள் சொந்த நாடு திரும்பி செல்லும். பறவைகளின் வருகையில் திடீர் சரணாலயமான ஏரியை, பார்த்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.