கஜா புயல் நிவாரண நிதி - முதல்வரிடம் ஒப்படைப்பு
கஜா புயல் நிவாரண நிதிக்கு, ராம்கோ சிமென்ட், வேலம்மாள் கல்வி அறக்கட்டளை, எஸ்ஆர்எம் கல்வி குழுமம், சரவணா ஸ்டோர்ஸ் ஆகியவை சார்பில் தலா ஒரு கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு உள்ளது.
கஜா புயல் நிவாரண நிதிக்கு, ராம்கோ சிமென்ட், வேலம்மாள் கல்வி அறக்கட்டளை, எஸ்ஆர்எம் கல்வி குழுமம், சரவணா ஸ்டோர்ஸ் ஆகியவை சார்பில் தலா ஒரு கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு உள்ளது. சென்னை - தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து, நிவாரண நிதி வழங்கப்பட்டது. இதுதவிர, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் 10 லட்சம் ரூபாய், நடிகர் விவேக் 5 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைத்தனர்.