பாலியல் வழக்குகளை விசாரிக்க காவல் ஆய்வாளர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க வேண்டும் - டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை எப்படி விசாரணை செய்ய வேண்டும் என காவல் ஆய்வாளர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கவேண்டும் என்று தமிழக டி.ஜி.பி.க்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-11-21 05:28 GMT
வீடு புகுந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை, சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கு, மாவட்ட அமர்வு நீதிமன்றம், 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து 2013 ல் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து வெங்கடேசன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி எம்.வி.முரளிதரன், வழக்கை காவல் துறையினர் முறையாக விசாரணை நடத்தவில்லை எனக் கூறி, விசாரணை நீதிமன்றம் தண்டனை விதித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தார். 

பாலியல் வன்கொடுமை வழக்கை எப்படி விசாரிக்க வேண்டும் எனத் தெரியாமல், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர், சர்வ சாதாரணமாக விசாரித்துள்ளதாகவும் அதிருப்தி தெரிவித்த நீதிபதி, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை எப்படி விசாரணை செய்ய வேண்டும் என, அனைத்து காவல் ஆய்வாளர்களுக்கும் சிறப்பு பயிற்சி வழங்க தமிழக டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்