திருப்பூர் : சிறுவன் தீக்குளித்து தற்கொலை முயற்சி
திருப்பூர் ராம் நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் லோகேஷ், தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
திருப்பூர் ராம் நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் லோகேஷ், தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அவரது அலறலை கேட்டு ஓடி வந்த சகோதரன் அருண், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அனைத்து, லோகேஷை மீட்டார். பின்னர், கோவை அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சை பிரிவில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.