காவல் நிலையத்தில் கட்ட பஞ்சாயத்து : ஆய்வாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவு
காவல் நிலையத்தில் கட்டபஞ்சாயத்து செய்த விவகாரம் தொடர்பாக, அம்பத்தூர் எஸ்டேட் காவல் ஆய்வாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் நிறுவனம் தொடர்ந்த செக் மோசடி வழக்கில், அம்பத்தூரை சேர்ந்த கணேசன் என்பவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்தது. இந்நிலையில் அம்பத்தூர் எஸ்டேட் காவல் ஆய்வாளர், கணேசனையும், தனியார் நிறுவன நிர்வாகிகளையும் அழைத்து கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளார். இது தொடர்பாக கணேசன் உயர்நீதிமன்றத்தில் புகார் மனு அளித்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள். கட்டபஞ்சாயத்து செய்த விவகாரம் தொடர்பாக, அம்பத்தூர் எஸ்டேட் காவல் ஆய்வாளர் அக்டோபர் 4-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டனர்.