தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...

மேட்டூர், பவானிசாகர் மற்றும் அமராவதி அணைகளில் இருந்து வினாடிக்கு 2.8 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறக்க வாய்ப்பு.

Update: 2018-08-16 10:54 GMT
காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மத்திய நீர்வள ஆணையம் 12 மாவட்டங்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.  கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வாய்ப்புள்ளதாகவும், இந்த நீர் 2 நாட்களுக்குள் மேட்டூர் வந்தடையும் எனவும் மத்திய நீர்வள ஆணையம் எச்சரித்துள்ளது. இதுதவிர பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் உபரிநீரையும் சேர்த்து வினாடிக்கு 2 லட்சத்து 60 ஆயிரம் கனஅடி அளவுக்கு, காவிரியில் நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர அமராவதி அணையில் இருந்து திறக்கப்படும் நீரையும் சேர்த்து திருமுக்கூடல் கீழ்பகுதியில் காவிரி ஆற்றில் 2 லட்சத்து 80 ஆயிரம் கனஅடி அளவுக்கு நீர் திறக்க வாய்ப்புள்ளதாகவும் ஆணையம் எச்சரித்துள்ளது. இதனால்,

1) கிருஷ்ணகிரி
2) தர்மபுரி
3) சேலம்
4) ஈரோடு
5) நாமக்கல்
6) கரூர்
7) திருச்சி
8) தஞ்சை
9) நாகை
10) திருவாரூர்
11) அரியலூர்
12) காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு மத்திய நீர்வள ஆணையம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


Tags:    

மேலும் செய்திகள்