வாழ்வதற்கு ஏற்ற இந்திய நகரங்களின் பட்டியலில் திருச்சிக்கு 12-வது இடம்

மத்திய வீடு மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் சார்பில், வாழ்வதற்கு ஏற்ற இந்திய நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2018-08-14 06:43 GMT
சமூக பொருளாதார நிலை, உள்கட்டமைப்பு, அரசு நிர்வாகம் உள்ளிட்ட முக்கிய காரணிகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் பட்டியலில், புனே முதலிடம் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலின் முதல் பத்து இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த எந்த நகரமும் இடம்பெறவில்லை. 

இந்தப் பட்டியலில், திருச்சி 12-வது இடத்திலும், சென்னை 14-வது இடத்திலும் உள்ளது. மொத்தம் 111 நகரங்கள் உள்ள இந்தப் பட்டியலில் முதல் பத்து இடங்களில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து மட்டும் மூன்று நகரங்கள் இடம் பிடித்துள்ளன. 

இதேபோல, கடைசி பத்து இடங்களில் பீஹார் தலைநகர், நாகலாந்து தலைநகர் கொஹிமா உள்ளிட்ட நகரங்கள் உள்ளன. இந்தப் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான வாரணாசி, 33-வது இடத்தில் உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்