காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு...
"அடுத்த 4 நாட்களில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு" கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அடுத்த நான்கு நாட்களில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கும் என்பதால், கரையோரப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அமைச்சர் அன்பழகன் அறிவுறுத்தியுள்ளார்.
முன்னதாக வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து ஆய்வு செய்த அமைச்சர் அன்பழகன், அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.