சென்னையில் 52 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி போலீசில் சரண்

என்கவுன்ட்டருக்கு பயந்து சரணடைந்ததாக தகவல்

Update: 2018-07-12 05:39 GMT
சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் ​பேரில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ரவுடிகளை ஒழிக்கும் பணியில் போலீஸார் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். தாம்பரம் நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்த சூர்யா என்ற ரவுடி மீது சேலையூர், பீர்க்கன்காரணை, கூடுவாஞ்சேரி, ஓட்டேரி, மணிமங்கலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 52-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் சூர்யாவின் கூட்டாளிகள் 6 பேர் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட நிலையில்,  சேலையூர் உதவி ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்ப​டை போலீஸார், தன்னை எந்த நேரத்திலும் கைது செய்யலாம் என்ற நிலையில், தெற்கு மண்டல காவல் இணை ஆணையர் அலுவலகத்தில் ரவுடி சூர்யா சரண்​அடைந்துள்ளார். அவரை பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்திய போது, கழிவறை சென்றவர் தடுக்கி விழுந்து கால் உடைந்துள்ளது. இந்நிலையில் விசாரணைக்கு பின்னர் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரவுடி சூர்யா, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்