"நீட் பயிற்சியில் நாட்டுக்கே தமிழகம் முன்மாதிரியாக உள்ளது"
"நீட் தேர்வில் தமிழக அரசின் நிலைப்பாடு வேறு"-அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
"இலவச பயிற்சி பெற்ற பெரும்பாலான மாணவர்கள் வெற்றி"
மருத்துவம் பல்மருத்துவ படிப்புகளுக்கான நீட்தேர்வு குறித்த தமிழக அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்றும், தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்து உள்ளார். மதுரை எஸ்.பி. நத்தத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.