கேரளாவில் பள்ளிப் படிப்பை முடித்த 3 மாணவர்களுக்கு தமிழக அரசு ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ கலந்தாய்வு

தமிழக ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க கேரளாவை சேர்ந்த 3 மாணவர்களுக்கு தடையில்லை

Update: 2018-07-06 06:28 GMT

கேரளாவில் பள்ளிப் படிப்பை முடித்த 3 மாணவர்களுக்கு, தமிழக அரசு ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி அளித்துள்ளது.

பன்னிரெண்டாம் வகுப்பு வரை கேரள மாநிலத்தில் பயின்ற தங்களுக்கு, தமிழக ஒதுக்கீட்டில் வரும் மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை எனக்கூறி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், 3 பேர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தாங்கள் அனைவரும் தமிழர்கள் தான் என்றும், படிப்பதற்காக மட்டுமே கேரளா சென்றதாகவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. 

இதையடுத்து, தமிழக ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க 3 மாணவர்களுக்கு தடையில்லை என நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்