"தமிழகத்தில் ஜொலிக்கப்போகும் ரயில் நிலையங்கள்" - வெளியான ஹேப்பி நியூஸ்!

Update: 2023-08-05 01:41 GMT

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள 18 ரயில்நிலையங்கள் உட்பட இந்தியாவில் உள்ள 508 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிக்கு, வரும் 6-ம் தேதி பிரதமர் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டவுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த, சென்னை கோட்டம் ரயில்வே மேலாளர் விஸ்வநாத் ஈரய்யா இதனை தெரிவித்தார். செங்கல்பட்டு, பெரம்பூர் உட்பட 18 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படவுள்ளதாக கூறிய அவர், வரும் டிசம்பருக்குள் சென்னை கோட்டத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்