ஆஸ்திரேலியாவிற்கு ஷாக் கொடுக்குமா ஆப்கானிஸ்தான்..? | World Cup 2023

Update: 2023-11-07 08:45 GMT

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. மும்பை வான்கடே மைதானத்தில் மதியம் 2 மணிக்கு இந்தப் போட்டி தொடங்கவுள்ளது. 10 புள்ளிகளைப் பெற்றுள்ள ஆஸ்திரேலியா, இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறிவிடும். அதனால் அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் ஆஸ்திரேலியா இன்று களமிறங்கக்கூடும். அரையிறுதி ரேஸில் நீடிக்கும் ஆப்கானிஸ்தான் இன்று வெற்றி பெற்றால், வாய்ப்பு பிரகாசமாகும். ஏற்கனவே இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தியுள்ள ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியாவிற்கும் அதிர்ச்சி அளிக்குமா என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்