ஐபிஎல் வரலாற்றில் ஒரு மைதானத்தில் 3 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர் என விராட் கோலி சாதனை படைத்துள்ளார். சின்னசாமி மைதானத்தில் மட்டும் விராட் கோலி 3 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். சென்னைக்கு எதிரான நேற்றையப் போட்டியில் கோலி இந்த சாதனையை நிகழ்த்திய நிலையில், கோலிக்கு அடுத்தபடியாக இந்தப் பட்டியலில் மும்பை முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா உள்ளார். வான்கடே மைதானத்தில் ரோகித் சர்மா, 2 ஆயிரத்து 295 ரன்கள் அடித்துள்ளார்.