இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் ஃபின், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
2010ஆம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் அறிமுகமான ஸ்டீவன் ஃபின், 2017ஆம் ஆண்டு வரை அந்த அணிக்காக விளையாடினார்.
கடந்த ஆறு ஆண்டுகளாக இங்கிலாந்து அணியில் களமிறங்காத ஃபின், 34 வயதான நிலையில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஏற்கனவே, ஸ்டூவர்ட் ப்ராட், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், ஸ்டீவன் ஃபின்னின் ஓய்வு அறிவிப்பு, ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.