இந்தியா - இங்கிலாந்து 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் வருகிற 2ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில், இந்தப் போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், ஜடேஜா லேசான காயம் அடைந்து தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. காயம் காரணமாக ஜடேஜா விலகினால் குல்தீப் யாதவ் இந்திய அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.