ஆப்கானிஸ்தானுக்கு எதிரான பரபரப்பான டி20 போட்டியில், 2வது சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற இந்தியா, அந்த அணியை ஒயிட்வாஷ் செய்து அசத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா, 20 ஓவர்களில் 212 ரன்கள் குவித்தது. கேப்டன் ரோகித் சர்மா, சதம் விளாசி அசத்தினார். ரிங்கு சிங் 69 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியும், குர்பாஸ், சத்ரான், நைப், நபி ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால், 212 ரன்களை எடுத்தது. போட்டி சமனில் முடிவடைந்தததையொட்டி நடைபெற்ற சூப்பர் ஒவரில், முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான், 16 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில், ரோகித் சர்மா 2 சிக்சர்களை பறக்கவிட்டார். இருப்பினும், சூப்பர் ஓவரில் இந்தியாவும்16 ரன்களே எடுத்ததால் போட்டி, 2வது சூப்பர் ஓவருக்கு சென்றது. அதில் முதலில் பேட் செய்த இந்தியா, 11 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 1 ரன்கள் மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தோல்வியடைந்தது. சர்வதேச டி20 போட்டியில், 2 சூப்பர் ஓவர்கள் வீசப்பட்டது இதுவே முதல்முறையாகும். ஏற்கனவே ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றிருந்த இந்தியா, இந்த வெற்றி மூலம் அந்த அணியை ஒயிட்வாஷ் (whitewash) செய்துள்ளது.