வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் ஷான் மசூட்டிற்கு அவுட் கொடுக்கப்பட்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஷான் மசூட் பேட்டில் பந்து பட்டு விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனதாக வங்கதேச வீரர்கள் அப்பீல் செய்தனர். பந்து பேடில் (pad) பட்டு கீப்பரிடம் தஞ்சமான நிலையில் மூன்றாம் நடுவர் அவுட் கொடுக்க சொன்னதால் களநடுவர் அவுட் கொடுத்தார். பந்து பேட்டில் படவில்லை என ஷான் மசூட் களநடுவரிடம் வாக்குவாதம் செய்துவிட்டு வெளியேறிய நிலையில் காட்சிகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.