மோட்டார் கார் ரேலி பந்தயம் : தலைக்குப்புற கவிழ்ந்த கார்

ஸ்பெயினில் நடைபெற்ற மோட்டார் கார் ரேலி பந்தயத்தில் கார் ஒன்று தலைக்குப்புற கவிழ்ந்தது. மோட்டார் கார் ரேலி பந்தயத்தின் விறுவிறுப்பான சுற்று ஸ்பெயினில் நடைபெற்றது

Update: 2018-10-27 06:14 GMT
ஸ்பெயினில் நடைபெற்ற மோட்டார் கார் ரேலி பந்தயத்தில் கார் ஒன்று தலைக்குப்புற கவிழ்ந்தது. மோட்டார் கார் ரேலி பந்தயத்தின் விறுவிறுப்பான சுற்று ஸ்பெயினில் நடைபெற்றது. இதில் கரடு முரடான பாதை மற்றும் நெடுஞ்சாலைகளில் கார் சீறிப் பாய்ந்தது. இதில் நடப்பு உலக சாம்பியன்ஷிப் படடத்திற்கு போட்டி போடும் பெல்ஜியம் வீரர் தியரி நியூவியில்லின் கார் (Thierry Neuville )வளைவை கடக்கும் போது தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் அவருக்கு காயம் ஏற்படவில்லை.

இந்த விபத்தால் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் தொடங்கியது. தியரிக்கு ஏற்பட்ட விபத்தை பயன்படுத்திக் கொண்டு, 5 முறை உலக சாம்பியனான செபாஸ்டியன் ஒஜியர், ஒரு நிமிடம் 34 விநாடிகளில் லேப்பை முடித்தார். போட்டி வரும் ஞாயிற்றுகிழமை வரை நடைபெறும்
Tags:    

மேலும் செய்திகள்