மின்கம்பி அறுந்து விழுந்ததில் பலியான 2 சிறுவர்கள் - கண்கலங்கி நின்ற அமைச்சர் பொன்முடி

Update: 2024-06-23 16:56 GMT

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள் முகத்தை பார்த்து கண்கலங்கிய அமைச்சர் பொன்முடி குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். தடுத்தாட்கொண்டூர் கிராமத்தை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் பம்ப்செட்டில் குளித்துக் கொண்டிருந்த போது மின் கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், அமைச்சர் பொன்முடி உயிரிழந்த சிறுவர்களின் உடலை நேரில் சென்று பார்த்து அஞ்சலி செலுத்தினார். மேலும் சிறுவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு தேவைப்படும் உதவி செய்யப்படும் என உறுதியளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்