கட்சிப் பெயரில் உள்ள பிழையைத் திருத்த தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய், 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் அரசியல் கட்சித் தொடங்கியதை அடுத்து, வெற்றி(க்) கழகமா? வெற்றி கழகமா? என்ற விவாதம் எழத் தொடங்கியது. இந்நிலையில், தமிழ் அறிஞர்களின் கூற்றை ஏற்ற விஜய், கட்சியின் பெயரில் வெற்றிக்கு பக்கத்தில் 'க்' என்ற எழுத்தை சேர்க்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அக்கட்சியின் உயர் மட்ட நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.