களேபரங்களுக்கு மத்தியில்... வேலூரில் வேட்புமனு தாக்கல் - மன்சூர் அடுத்த அதிரடி
வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும், இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சித் தலைவரும் நடிகருமான மன்சூர் அலிகான், தேர்தல் நடத்தும் அலுவலரிடம், வேட்பு மனுவை தாக்கல் செய்தார். புதிய அரசியல் கட்சித் தொடங்கி, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருந்த மன்சூர் அலிகான், கடந்த சில நாட்களாக வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலட்சுமியிடம், அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.