குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள வைகோ, குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவில் குடிபெயர்ந்து வாழ்ந்துவரும் இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தி ஒதுக்குகிறது என்றும், நாட்டின் பன்முகத்தன்மையை இந்த சட்டம் சீர்குலைத்துவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற சட்டங்களைத் தடுக்க, பாஜக ஆட்சியை ஜனநாயக சக்திகள் அகற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.