பேரவையில் விடாபிடியாக ஈபிஎஸ்..உடனே முதல்வர் சொன்ன வார்த்தை - இனி ஓபிஎஸ் எங்கே அமர்வார்?
பேரவையில் விடாபிடியாக ஈபிஎஸ்..உடனே முதல்வர் சொன்ன வார்த்தை - இனி ஓபிஎஸ் எங்கே அமர்வார்?
எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தை மறுபரிசீலனை செய்ய சபாநாயகருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார்.
சட்டப்பேரவையில் இதுதொடர்பாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். 4 முறை சபாநாயகரை சந்தித்து கடிதம் கொடுத்திருப்பதாகவும், பலமுறை நேரிலும் வலியுறுத்தி இருப்பதாகவும் கூறினார். அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கையை மறுபரிசீலனை செய்து ஆவன செய்ய வேண்டும் என சபாநாயகரிடம் வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கையை மறுபரிசலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.