"இந்த ஆய்வுக்குழு வெறும் கண் துடைப்பு.. என்னால் முடியாது" - காங். மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன்
இதுகுறித்து மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதியுள்ளார். அதில் அரசியலமைப்பு ரீதியாக, சந்தேகத்திற்குரிய சாத்தியமற்ற யோசனையை, பொதுத்தேர்தலுக்கு முன்பாக தேசத்தின் மீது திணிக்கும் முயற்சி என விமர்சித்துள்ளார். மேலும் இந்த ஆய்வுக்குழு கண் துடைப்புக்காக மட்டுமே என்றும், இக்குழுவில் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான மல்லிகார்ஜூன கார்கேவை புறக்கணித்திருப்பது, நாடாளுமன்ற ஜனநாயகத்தை இழிவுபடுத்தும் செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே உங்களின் அழைப்பை நிராகரிப்பதை தவிர வேறு வழியில்லை எனவும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார்.