"காலைல அகத்திக்கீரையை கொடுத்துட்டுமதியம் வந்து கம்ப்ளைண்ட் பண்ணுறாங்க" - அமைச்சர் நகைச்சுவை பேச்சு
சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டல பகுதிகளில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பழவந்தாங்கல் பக்தவச்சலம் நகர் பகுதியில் உள்ள திரிசூலம் குவாரி பகுதியில் இருக்கும் நீரை சுத்திகரிப்பு செய்து பொது மக்களுக்கு விநியோகம் செய்வது குறித்து அமைச்சர் கே.என்.நேரு விசாரித்தார். பின்னர் எஸ்.ஐ.பி. காலனியில் உள்ள மீட்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு மாநகராட்சி சார்பில் விளையாட்டு திடல் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, மழைநீர் வடிகால்வாய் பணிகள் இணைப்பு மட்டும் மீதம் உள்ளது. 98 சதவீத பணிகள் முடிந்து உள்ளதாக கூறினார்.