பிரதமர் மோடி ஊழல்வாதி என சொல்பவர்களுக்கு அரசியல் எதிர்காலமே இல்லையென, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை மேற்கொண்ட அவருக்கு, பாஜக நிர்வாகிகளும் தொண்டர்களும் மேள தாளங்கள் முழுங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மக்கள் மத்தியில் பேசிய அவர், இந்தியாவை தவறாக பேசும் ராகுல் காந்திக்கும், இந்து தர்மத்தை தவறாக பேசும் அமைச்சர் உதயநிதிக்கும் வாய்ப்பூட்டு போட வேண்டும் என்றார்.