- முதல்வர் பதவி தனக்கு முக்கியமில்லை என, மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
- மத்தியப்பிரதேசத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவராஜ் சிங் சவுகான், வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை மாநில வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
- மக்களின் முன்னேற்றத்திற்காக பா.ஜ.க. உழைப்பதாகவும், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
- மத்தியப்பிரதேச வரலாற்றில், பா.ஜ.க மிகப்பெரிய பெரும்பான்மையை பெறும் என்றும் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.