நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சி விவசாய அணி மாநில தலைவர் ஷேக் பரீத் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், ஊடகவியலாளர் முக்தாரின் குடும்ப பெண்கள் குறித்து சீமான் அவதூறாக பேசி வருவதாகவும்,
தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அண்ணாமலை பேசி வருவதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.